அயோத்தி ராமர் கோயில் மக்களின் தரிசனத்திற்கு எப்பொழுது வரும்? வெளியான முக்கிய அறிவிப்பு !

அயோத்தி ராமர் கோயில் மக்கள் அதற்கு பக்தர்கள் தரிசனத்திற்கு எப்போது வரும்? என்பது தொடர்பான முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2021-09-07 14:07 GMT

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. நோய் தொற்று காலத்திலும் கூட பணிகள் தொய்வின்றி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 


மேலும் ராமர் கோயில் தரிசனம் செய்வதற்காக பல்வேறு பக்தர்கள் தங்களுடைய நன்கொடைகளை கோயிலுக்காக வழங்கியிருக்கிறார்கள் இந்நிலையில் அவர்கள் எதிர்பார்க்கும் ஒரே விஷயமாக தரிசனத்திற்கு எப்போதோ தயாராகும் என்ற ஒரு கேள்விதான். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை எப்போது உருவாகும்? என்பது போன்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கும். இதற்கு தற்போது விளக்கம் தரும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.  


இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் தரிசனம் தொடர்பான முக்கிய அறிவிப்பை விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பரந்தே இதுபற்றி கூறுகையில், "ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட காலத்திற்குள் முடிவடைந்து விடும். அக்டோபர் மாதத்துக்குள் அஸ்திவாரம் தயார் ஆகி விடும். 2023ம் ஆண்டு டிசம்பரில் ராமர் சிலை கர்ப்பகிரகத்தில் நிறுவப்பட்டு, தினசரி பூஜைகள் துவக்கப்படும். பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

Input:NewsToday.net

Image courtesy:news today


Tags:    

Similar News