ராமர் கோயில் எப்போது திறக்கப்படும். வெளியான புதிய தகவல், பக்தர்கள் மகிழ்ச்சி !

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் சுமார் ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் அறக்கட்டளையின் தலைவர் நரூபேந்திர மிஸ்ரா தலைமையில் பொறியாளர்கள் மற்றும் மிகப்பெரிய கட்டுமான வல்லுனர் குழுவினர் கடந்த மாதம் சந்தித்துப் பேசினர்.

Update: 2021-08-05 06:52 GMT

அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், 2023ம் ஆண்டு பக்தர்களுக்காக திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.    

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் சுமார் ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான முறையில்  ராமர் கோயில் கட்டப்பட்டு  வருகிறது. இந்த கோயில் அறக்கட்டளையின் தலைவர் நரூபேந்திர மிஸ்ரா தலைமையில் பொறியாளர்கள் மற்றும் மிகப்பெரிய கட்டுமான வல்லுனர் குழுவினர் கடந்த மாதம் சந்தித்துப் பேசினர்.


அப்போது அவர்கள் பேசும்போது, ராமர் கோயிலை 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்தர்களுக்காக திறக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதிலும் கோயில் கட்டுமானப் பணிகள் 2025ம் ஆண்டுதான் முழுமையடையும் என கூறப்படுகிறது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Outlook India

https://www.puthiyathalaimurai.com/newsview/111964/Ayodhya-Ram-Temple-to-be-opened-in-2023

Tags:    

Similar News