சாத்தியமில்லை என்று கூறியதை தற்போது சாத்தியமாக்கி வரும் மோடி அரசு!

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்வதற்கு பிரதமர் விரைவில் செல்வார்.

Update: 2022-10-21 01:57 GMT

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றனர். இந்த பணிகளை பிரதமர் மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பூமி பூஜை உடன் தொடங்கி வைத்தார். அப்பொழுது முதல் மின்னல் வேகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்து பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வேகமாக பணிகள் நடந்து வருகின்றனர்.


இந்த கோவில் கட்டுமான பணிகளை மாநில முதல் மந்திரி யோகி ஆதித்தனார் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். அத்துடன் கட்டுமான பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியும் ராமர் கோயில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாக கட்டுமான குழு தெரிவித்துள்ளதும், கட்டுமான தலைவரை அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ராமர் கோயில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி விரைவில் பார்வையிடலாம் என்று குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவில் கட்டுமான பணித்திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ராமர் கோயில் முன்பு பக்தர்கள் வேண்டுதல் செய்ய வாய்ப்பு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருந்தது. கற்பகிரகம் மற்றும் ஐந்து மண்டபங்கள் அடங்கிய தரைத்தளத்துடன் மூன்று மாடி ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சு நடந்து வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது. கட்டுமானக்குழு அக்டோபர் முதல் வாரத்தில் பிரிந்த கனமழை காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தற்போது அதுவே எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News