ஏழைகளுக்கான கேடயம், வரப்பிரசாதம் இது... பிரதமர் மோடி கூறியது எதை..?
ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளுக்கான கேடயம் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் அறிவியல் அடிப்படையில் சித்தா ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கும், மேம் படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இந்தியாவில் உள்ள ஒரு உச்சபட்ச அமைப்பாகும். சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் (CCRS) கீழ், 9 புற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் 3, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, புதுதில்லி, ஆந்திரா மற்றும் கோவாவில் தலா 1 ஆராய்ச்சி மற்றும் பொது மக்களின் தேவைகளுக்கு மருத்துவ சேவை வழங்குவதோடு மருந்தியல் மற்றும் இலக்கிய ஆராய்ச்சி என செயல்படுகின்றன.
மேலும், சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் தொடர்ந்து பொது மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தின நினைவாக, யோகா மஹோத்சவ் 2023 கவுண்டவுன் நிகழ்ச்சியை இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் மொராஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது பற்றி பகிர்ந்துகொள்ள பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை சகோதர சகோதரிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆயுஷ்மான் பாரத் பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் இது பற்றி கூறுகையில், "ஆயுஷ்மான் பாரத் நமது ஏழை சகோதர சகோதரிகளின் சிகிச்சை செலவு பற்றிய கவலையை நீக்கியுள்ளது. இந்தத் திட்டம் அவர்களுக்கு ஒரு தற்காப்புக் கேடயமாகவும், வரப்பிரசாதமாகவும் மாறியுள்ளது" என கூறினார்.
Input & Image courtesy: News