ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்: இந்தியாவின் சுகாதார பயணத்தின் புதிய உயரங்கள்!
இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார பயணத்தில் புதிய உயரங்கள் எட்டப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், ஸ்கேன் மற்றும் பகிர்தல் சேவை மூலம் 365 மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவில் விரைவான பதிவுக்கு வழிவகுத்து 5 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளார்கள். தேசிய சுகாதார ஆணையத்தின் முக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தில் ஸ்கேன் சேவை 2022 அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. வெளி நோயாளிகளின் பிரிவில் விரைவான பதிவுக்கு வகை செய்ய இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகப்படுத்தப்பட்ட 5 மாதங்களில் 365 மருத்துவமனைகள் இதை ஏற்று பின்பற்ற தொடங்கியுள்ளன.
இந்த மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவில் இதுவரை 5 லட்சம் பேர் பதிவு செய்து பயன்பெற்றுள்ளனர். காத்திருப்பதை தவிர்த்து விரைவான சேவைக்கு இது வழிவகுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார பயணத்தில் புதிய உயரங்கள் எட்டப்படுவதாக கூறியுள்ளார்.
இதில் பங்கேற்கும் மருத்துவமனைகள் ஆரோக்கிய சேது, ஏகாகேர் உள்ளிட்ட செயலிகளில் பிரத்யேக கியூ.ஆர் குறியீட்டை ஏற்படுத்தி அதன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்குகின்றன. டிஜிட்டல் சுகாதார பயணத்தில் ஆரோக்கியமான வாழ்வு, மக்களின் நலன் கருதி பல்வேறு வகையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Input & Image courtesy: News