PMAY மற்றும் PMSY திட்டத்தின் கீழ் கடன் வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவிக்க கூடாது!

PMAY மற்றும் PMSY திட்டத்தின் கீழ் கடன் வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவிக்க கூடாது!

Update: 2021-02-12 07:30 GMT

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா போன்ற மத்திய திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு கடன் வழங்குவதை தாமதப்படுத்த வேண்டாம் என்று கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியுரப்பா வியாழக்கிழமை வங்கிகளுக்கு அறிவுறுத்தினார்.

அங்குள்ள விதான் சவுதாவில் நடந்த கூட்டத்தில் வங்கிகள் மற்றும் அதிகாரிகளுடன் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த முதல்வர், மாநிலத்தில் அவை செயல்படுத்தப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

"இந்த இரண்டு திட்டங்களின் முன்னேற்றமும் கர்நாடகாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தேக்க நிலையில் உள்ளது. இந்தத் திட்டங்களின் கீழ் கடன்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க வங்கியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்று எடியூரப்பா மேற்கோளிட்டுள்ளார்.

PMAY மற்றும் PMSY ஆகியவை ஏழைகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட லட்சிய திட்டங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். இத்திட்டங்களை செயல்படுத்த வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வர் பரிந்துரைத்தார்.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா:

இந்தியாவில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், கடந்த 2015 –ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடுகளை வழங்குவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் (யு.டி.க்கள்) மற்றும் மத்திய நோடல் ஏஜென்சிகள் (சி.என்.ஏக்கள்) மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மிஷன் மத்திய உதவியை வழங்குகிறது.

ஏழைகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்ட்தில் கீழ் வரும் 2021-22 நிதியாண்டின் இறுதிக்குள் 20 மில்லியன் வீடுகளை கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், கட்டப்படும் வீடுகளில் கட்டாயமாக குடும்பத்தின் பெண் தலைவர்கள் உரிமையாளர் அல்லது இணை உரிமையாளராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார ரீதியாக பலவீனமான, குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் பயனாளர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இந்த திட்டத்தில், வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா:

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா’ எனப்படும் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய வீட்டுவசதி மற்று வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும். இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் ரூ.10,000 வரை கடன் பெற முடியும்.

இதில் வாங்கும் கடன் ஓராண்டு காலத்தில் மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். உரிய காலத்தில் இந்தக் கடன் தொகையைச் செலுத்தினாலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தினாலோ ஆண்டொன்றுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும். இந்த மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை நேரடியாக டெபாசிட் செய்யப்படும். பணத்தை முன்னதாகவே திருப்பிச் செலுத்திவிட்டால் அதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது. இத்திட்டத்தின் கீழ் தெருவோர் வியாபாரிகள் தொடர்ந்து விண்ணப்பித்து கடன் வாங்கி வருகின்றனர்.

Similar News