நாடாளுமன்றத்தில் பதாகைகள் இனி அனுமதி கிடையாது - சபாநாயகர் அதிரடி
அவையில் பதாகைகள், கண்டிப்பு வாசகங்கள் கொண்ட எடுத்து வர நாடாளுமன்றத்தில் அனுமதி இல்லை என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
அவையில் பதாகைகள், கண்டிப்பு வாசகங்கள் கொண்ட எடுத்து வர நாடாளுமன்றத்தில் அனுமதி இல்லை என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொழில் நடந்து வரும் வேளையில் ஏதாவது குறை சொல்லி கூட்டத் தொடரை சீர்குலைக்கும் வேலைகளில் எதிர்க்கட்சிகள் இறங்கி வரும் நிலையில் அட்டைகளை எடுத்து வரும் எம்.பி'க்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
அறிவிப்பு மற்றும் கண்டிப்பு அட்டைகள் எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் எம்.பி'க்கள் இதனை கண்டித்து தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா ஜனநாயகத்தின் கோவில் ஆன நாடாளுமன்றத்தின் மாண்பை காப்பது உறுப்பினர்களின் கடமை என கூறினார்.