ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை: BCCI அதிரடி அறிவிப்பு !

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம்.

Update: 2021-08-08 13:16 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக வீரர் மற்றும் வீராங்கனைகள் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டார்கள். குறிப்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று, ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபட்சமான பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.


இதுவே பதக்கங்களைப் பெற்ற வீரர்கள் உற்சாகப்படுத்தும் விதமாக BCCI-யை தற்பொழுது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதக்கம் வென்ற வீரர்களுக்கு BCCI-யை பரிசு தொகை அறிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசு தொகை அறிவித்துள்ளது. மேலும் இந்த பரிசு தொகை தொடர்பாக BCCI செயலாளர் ஜெய் ஷா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர் கூறுகையில், "ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு BCCI சார்பில் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். வெள்ளி வென்ற, மீராபாய் ஜானு மற்றும் ரவிகுமார் தாஹியாவுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்ற சிந்து, லவ்லினா, பஜ்ரங் பூனியாவுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படும். மேலும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடி பரிசு வழங்கப்படும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

Input: https://www.news18.com/cricketnext/news/bcci-to-give-cash-rewards-for-medal-winners-csk-to-award-rs-1-crore-for-neeraj-chopra-4058933.html

Image courtesy: news18

Tags:    

Similar News