பாபர் வருவதற்கு முன் இந்தியாவில் அனைவரும் இந்துக்களாக வாழ்ந்தனர்: அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா!
இந்துக்கள் மிகவும் பெரும்பான்மையாக வாழக்கூடிய நாடு இந்தியா மட்டும்தான். உலகில் உள்ள இந்துக்கள் அனைவருமே இந்தியாவை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இதனிடையே அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா பதவி வகித்து வருகிறது.
முகலாய மன்னரான பாபர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் அனைவருமே இந்துக்களாக வாழ்ந்து வந்தனர் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கருத்து கூறியுள்ளார். இந்துக்கள் மிகவும் பெரும்பான்மையாக வாழக்கூடிய நாடு இந்தியா மட்டும்தான். உலகில் உள்ள இந்துக்கள் அனைவருமே இந்தியாவை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இதனிடையே அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா பதவி வகித்து வருகிறது.
இந்நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நாடாக இந்தியா உள்ளது. எந்த நாட்டில் இந்துக்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் நமது இந்தியாவை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
கடந்த 1526ம் ஆண்டு முகலாய மன்னர் பாபர் இந்தியாவில் நுழைந்தார். அவர் வருவதற்கு முன்பு வரை இந்தியாவில் அனைவருமே இந்துக்களாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். மேலும் வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்துக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக இந்தியாவுக்கு வரலாம். அவர்களை எப்போதும் இந்தியா கைவிடாது என்றார். ஒரு இந்துவால் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மை வாதியாக இருக்க முடியும். இந்துத்வா என்பது ஒரு வாழ்க்கை முறை அதனை தடுக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. இந்தியா இருக்கும் வரை இந்துக்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Source,Image Courtesy: Dinamalar