விவசாய குழு தலைவர்களிடம் பேச்சு வார்த்தை தொடக்கம்.!

விவசாய குழு தலைவர்களிடம் பேச்சு வார்த்தை தொடக்கம்.!

Update: 2020-12-01 16:18 GMT

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் என்ற போர்வையில் மாவோயிஸ்டுகள் மற்றும் சமூக விரோதிகள் நுழைந்துள்ளனர். அவர்கள்தான் போலீசார் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். இது பெரிய அசம்பாவிதமாக மாறாமல் இருப்பதற்காக விவசாயிகளை டெல்லியில் அனுதிக்காமல் வேறு ஒரு பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தனர்.

இதன் பின்னர் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்கமறுத்தையடுத்து இன்று நடத்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலில் மறுத்த விவசாய குழு தலைவர்கள் பின்னர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக அறிவித்தனர்.  இந்நிலையில், விவசாய குழு தலைவர்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது. மத்திய அரசு சார்பில், வேளாண்மைதுறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மற்றும் வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
 

Similar News