சனாதன தர்மத்தை ஏற்கிறேன் - கிறிஸ்தவ மதத்திலிருந்து, இந்து மதத்திற்கு மாறுவதாக அறிவித்த பா.ஜ.க வேட்பாளர்!

Update: 2022-06-29 08:08 GMT

மத்தியப் பிரதேச மாநிலம், சாகரில் உள்ள மக்ரோனியா நகராட்சியின் கவுன்சிலர் பதவிக்கான பாஜக வேட்பாளர் ஒருவர், கிறிஸ்தவ மதத்திலிருந்து, இந்து மதத்திற்கு  மாறுவதாக அறிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் உள்ளன. இது குறித்து வேட்பாளர் விவின் டோப்போ கூறுகையில், சிறுவயதிலிருந்தே, நான் கிறிஸ்தவத்தை கடைப்பிடித்து வருகிறேன். எனது முன்னோர்கள் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த கவுட் தாக்கூர்.

எனக்கு இந்து மதத்தில் நம்பிக்கை உண்டு. இன்றும் நான் இந்து மதத்தைப் பின்பற்றுகிறேன். இந்து மதத்தின் பண்டிகைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் எனக்கும் நம்பிக்கை உண்டு. அதனால்தான், நான் எந்த பேராசையும், யமும் இல்லாமல், கிறிஸ்தவத்தை கைவிட்டு, குடும்பத்துடன் எனது தாய் மதத்திற்குத் திரும்புகிறேன்.

இன்னும் சில நாட்களில், கலெக்டரிடம் மாற்றுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து, சட்டப்பூர்வ செயல்முறையை முடிப்பேன்.

விவின், வயது 33, மக்ரோனியாவில் உள்ள கோபேஷ்வரில் வசிப்பவர், அதே வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் மந்திரங்களை ஓதுவது, ஹவானி செய்வது மற்றும் இந்து தெய்வங்களை வழிபடுவது போன்ற வீடியோவை வெளியிட்டார்.

Input From: Timesofindia

Similar News