அன்னியச் செலாவணியில் ஆண்டுக்கு ரூ 300 கோடி மிச்சமாகும்! வடகிழக்கு பகுதி ரயில் மின்மயமாக்கலில் மிகப்பெரிய சாதனை!

Big Boost to Rail Electrification in North East

Update: 2021-11-04 01:00 GMT

வரலாற்ற சிறப்புமிக்க சாதனையாக, கவுகாத்தி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில் சேவைகளின் மின்மயமாக்கலுக்கு சிஆர்எஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அஸ்ஸாமின் தலைநகரில் அமைந்துள்ள கவுகாத்தி வடகிழக்கு மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். வடகிழக்கின் மிகப்பெரிய நகரம் இப்போது அனைத்து பெருநகரங்களுடனும் 25 கிலோவாட் மின்தடம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

கதிஹாரிலிருந்து கவுகாத்தி வரை மொத்தம் 649 ரயில் கிலோமீட்டர் மின்மயமாக்கல் பணியை நார்த் ஈஸ்ட் ஃப்ரான்டியர் ரயில்வே வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த மாபெரும் சாதனை புது தில்லியிலிருந்து கவுகாத்தியை நேரடியாக இணைத்துள்ளது. பசுமை போக்குவரத்து இணைப்புக்கான மற்றொரு முயற்சி இது.

கடந்த அக்டோபர் 22-ம் தேதி அன்று பிரம்மபுத்திரா மெயில் காமாக்யா நிலையத்திற்கு மின்முறையின் மூலம் இயக்கப்பட்டதில் இருந்து மின்சார ரயில்களை நார்த் ஈஸ்ட் ஃப்ரான்டியர் ரயில்வே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மின்மயமாக்கல் காரணமாக எச் எஸ் டி எண்ணெய்க்கு செலவிடப்படும் அன்னியச் செலாவணியில் ஆண்டுக்கு ரூ 300 கோடி மிச்சமாகும். மேம்பட்ட இயக்கம் காரணமாக, ரயில்களின் அதிக வேகத்தில் இயக்கப்பட்டு பயண நேரம் கணிசம் குறையும்

மின்மயமாக்கல் மூலம் கனரக சரக்கு ரயில்களை அதிக வேகத்தில் இயக்க முடியும். இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலியத்தை சார்ந்திருப்பதை மின்மயமாக்கல் குறைக்கும். மின்சார இழுவைக்கான பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் குறையும், இது கார்பன் தடம் குறைவதற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News