இந்துமதத்திற்கு எதிரான பேச்சுக்கு ஷர்ஜீல் உஸ்மானி மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க கோரிக்கை!

இந்துமதத்திற்கு எதிரான பேச்சுக்கு ஷர்ஜீல் உஸ்மானி மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க கோரிக்கை!

Update: 2021-02-01 17:30 GMT
ஜனவரி 31 இல் மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளர் கேஷவ் உபாத்யே, சனிக்கிழமை அன்று புனேவில் எல்கர் பரிஷத்தில் இந்துவிற்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஷர்ஜீல் உஸ்மானி மீது மகாராஷ்டிரா முதலமைச்சர் உதவ் தாக்கரே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 
அறிக்கையின் படி, முன்னாள் மாணவர் சங்கத்தலைவரான உஸ்மானி 500 பேர் கொண்ட கூட்டத்தில் எல்கர் பரிஷத்தில் வைத்து உரையாற்றினார். அப்போது இந்து சமூகத்திற்கு எதிரான அவதூறு கருத்துக்களைக் கூறினார். உஸ்மானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் தாக்கரேக்கு வலியுறுத்தினார். "முதல்வர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா இல்லை இந்தத்துவாவை விலகவில்லை என்று கூறி ஆட்சியை தொடர்வாரா. மாநிலத்தின் உள்துறை அமைச்சரும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்,"  என்று கூறியுள்ளார். 

 சனிக்கிழமை அன்று எல்கர் பரிஷத்தில் 250 தலித் அமைப்புகள் கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த அமைப்பின் 200 ஆவது வருடம் நினைவுகூரும் விழா 2018 இல் நடைபெற்றது. மேலும் அந்த மாநாடு முடிவில் பீமா-கோரேகான் கிராமத்தில் வன்முறையில் முடிந்தது. மேலும் எல்கர் பரிஷத்தின் இரண்டாவது பதிப்பின் போது, ஷர்ஜீல் உஸ்மானி, அருந்ததி ராய், பிரசாந்த் கனோஜியா, ஆகியோர் மேடையை இந்துவிற்கு எதிரான அவதூறு கருத்துக்களைப் பரப்பப் பயன்படுத்திக் கொண்டனர். மேலும் உஸ்மானி இந்து அழுகிப்போனதாகக் கூறியபொழுது, அருந்ததி ராய் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
காஷ்மீர் சகோதரர்களுக்கு நீதி கிடைக்கும் வரையும் விவசாய சட்டம் திரும்பப்பெறும்வரை இந்த இயக்கம் தொடரும் என்று கனோஜியா தெரிவித்தார்.மேலும் RSS இந்த உலகத்தை விட்டுப் பிடுங்கி எரியும் வரையும் இந்த இயக்கம் தொடர்ந்து கொண்டியிருக்கும் என்று கூறினார். இதுதவிர, தலித் ஒடுக்கப்பட்டு இருப்பதை விட அவர்கள் தெருக்களில் இறங்கிப் போராடி இறப்பது மேல் என்றும் கூறினார். 

Similar News