தாஜ்மஹால் சிவாலயமாக இருந்தது - மூடப்பட்ட 20 அறைகளை திறக்க பா.ஜ.க. தலைவர் மனு!

Update: 2022-05-10 13:48 GMT

உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. ஊடகப் பிரிவு தலைவர் ராஜ்னீஷ் சிங், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாஜ்மஹால் பற்றி மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

அந்த மனுவில் தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 20 அறைகளையும் திறந்து அதில் இருக்கின்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: சில வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் இந்து அமைப்பினர் தாஜ்மஹால் முன்பு சிவாலயமாக இருந்நதாக கூறிவருகின்றனர். தாஜ்மஹாலின் முந்தைய பெயர் தேஜோ மஹால் எனவும் இதனை பார்க்கின்றபோது லிங்கங்களில் ஒன்றாகவும் தோற்றம் அளிக்கிறது. எனவே இதன் உள்ளே 20 அறைகள் நீண்ட காலமாக பூட்டியே உள்ளது. இதில் சிவன் உள்பட பல இந்து கடவுள்களின் சிலைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. உடனடியாக தொல்லியல்துறை சார்பில் பூட்டப்பட்ட அறைகளை உடனடியாக திறப்பதற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The Japan Times

Tags:    

Similar News