பள்ளியில் வழங்கிய இலவச சைக்கிளை வாங்க மறுத்த பா.ஜ.க., தலைவர் மகள்.!

பள்ளியில் வழங்கிய இலவச சைக்கிளை வாங்க மறுத்த பா.ஜ.க., தலைவர் மகள்.!

Update: 2021-01-31 10:55 GMT

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச சைக்கிளை பள்ளி மாணவி ஒருவர் வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் பாஜக தலைவர்கள் மீது அம்மாநில போலீசார் பொய் வழக்குகளை போட்டு கைது செய்து வருவதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அது போன்று பிர்மம் மாவட்த்தில் பாஜக தலைவர் ஒருவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாஜக தலைவரின் மகள் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தனது எதிர்ப்பை பள்ளியில் பதிவு செய்துள்ளார். 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அந்த மாணவி, தனது தந்தை மீது போடப்பட்ட பொய் வழக்கிற்காக கைது செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், பள்ளியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட மிதிவண்டியை வாங்க மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவியிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பேசிப்பார்த்துள்ளார். அப்போதும் அந்த மாணவி வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த மிதிவண்டி மீண்டும் அரசுக்கே அனுப்பி வைக்கப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவி ஒருவர் முதலமைச்சருக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ள சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியவரும்.

Similar News