பா.ஜ.க உயர்மட்ட குழுவில் இடம்பெற்ற முதல் தமிழ் பெண் என்ற பெருமையை தட்டி சென்ற வானதி சீனிவாசன்

பாரதிய ஜனதாக் கட்சியில் தற்போது மத்திய தேர்தல் குழுவில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-08-19 01:49 GMT

வரப்போகும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கருத்தில் கொண்டு தற்போது பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய மத்திய தேர்தல் குழு உறுப்பினர்களை மாற்றி அமைத்துள்ளது. மேலும் இந்த தேர்தல் குழுவில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த, மத்திய மந்திரி சர்பானந்தா சோனாவால் அவர்கள் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இருந்து வானதி சீனிவாசன் அவர்களும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது தமிழகத்திற்கு இருப்பவர்களுக்கு பெருமை அளிக்கிறது. 


மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த மத்திய தேர்தல் குழுவின் பல்வேறு பணிகள் தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியில் அதிக பட்ச அங்கீகாரத்தை கொண்ட அமைப்பாக ஆட்சி மன்ற குழு திகழ்கின்றது. இந்த ஆட்சி மன்ற குழு தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களை தேர்வு செய்வது, கட்சி அளவிலான முக்கிய முடிவுகளை எடுப்பது என அனைத்திலும் இந்த குழு உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.  


தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு, களப்பணி, மக்களிடம் சென்று நேரடியாக பங்கு பெறுவது போன்ற பல்வேறு பணிகள் அடங்கியுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த குழு ஒட்டுமொத்த இந்தியாவின் நபர்களை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2020 என்னால் ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து அதிகமானோர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக அமர வேண்டும் என்பதே தற்போதைய நோக்கமாக இருக்கிறது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News