டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு எதிராக போராடிய பா.ஜ.க.வினர், தண்ணீர் பீரங்கி மூலம் விரட்டியடிப்பு !
சமீப காலமாக டெல்லியில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் உள்ள மக்கள் அவர்களது அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நமது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுபேற்று ஆட்சி நடத்தி வருகிறார். சமீப காலமாக டெல்லியில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் உள்ள மக்கள் அவர்களது அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி டெல்லியில் பல பகுதிகளில் தண்ணீர் இல்லாததால், கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில பகுதியில் தண்ணீர் லாரி மூலம் மக்களுக்கு தண்ணீரை விநியோகித்து வரும் நிலைக்கு டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க டெல்லி அரசு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று டெல்லியில் உள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் டெல்லியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை முன்னிட்டு பா.ஜ.க தொண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கலைந்து செல்லும்படி காவல் துறையினர் எச்சரித்தனர். எனினும், அதனை பா.ஜ.க.வினர் ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . இதனையடுத்து, காவல் துறை அதிகாரிகள் தண்ணீர் தடுத்துப்பாட்டிற்கு எதிராக போராடிய பா.ஜ.க.வினர் மீது தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை அந்த பகுதியில் இருந்து விரட்டியடித்தனர்.