சக பயணிகளோடு ரயிலில் எளிமையாக பயணித்து குறைகளைக் கேட்டறிந்தார் ! ரயில்வே அமைச்சர் !

Indian Railway Minister.;

facebooktwitter-grey
Update: 2021-08-20 00:22 GMT
சக பயணிகளோடு ரயிலில் எளிமையாக பயணித்து குறைகளைக் கேட்டறிந்தார் ! ரயில்வே அமைச்சர் !

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பயணிகள் ரயிலில் பயணம் செய்தார். ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் - ரயஹடா இடையேயான பயணிகள் ரெயிலில் அவர் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் போது சக பயணிகளிடம்  சாகசமாக பயணித்து அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.  

மேலும், ரயில் பயணத்தின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சக பயணிகள் வழங்கிய ஆலோசனைகளை மத்திய மந்திரி கேட்டறிந்தார்.

மத்திய ரெயில்வே மந்திரி பயணிகள் ரெயிலில் பயணம் செய்து சக பயணிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

இந்த பயணம் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது


.Maalaimalar.

Tags:    

Similar News