I.S.R.O : ககன்யான் திட்டம் ! ரஷ்யாவிற்கு பயணமாகும் 4 விண்வெளி வீரர்கள் !

ISROவின் ககன்யான் திட்டம் சார்பாக ரஷ்யாவிற்கு பயணமாகும் 4 இந்தியா விண்வெளி வீரர்கள்.

Update: 2021-08-31 13:54 GMT

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தக் கூடிய விண்வெளி உடையை வடிவமைப்பதற்கு இந்தியாவில் இருந்து 4 இந்தியா வீரர்கள் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா பயணம் மேற்கொண்டு உள்ளார்கள். விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்ப அமெரிக்கா, ஜெர்மனி என பல்வேறு உலக நாடுகளும்கூட இந்தியாவையே நாடுகின்றன. இந்நிலையில், அடுத்தகட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீன ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. 


இந்த வரிசையில் இந்தியாவும் விரைவில் இடம் பெறப்போகிறது. இதற்காகத் தான் புதிய திட்டத்தின் ஆய்வுகளை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. சுமார் ரூ 10 ஆயிரம் கோடி ககன்யான் திட்டம் செயல்படுத்தி வருகிறது. GSLV mark- 3 ராக்கெட் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக இந்திய விமானப் படையில் இருந்து விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் வகையில் அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்று சிறப்புப் பயிற்சி பெற்றனர். 


இந்த பயிற்சிக்காக இந்தியாவும் ரஷ்யாவும் கடந்த 2019 ஜூன் 17ஆம் தேதி சிறப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இத்திட்டத்தில் பயன்படுத்த வேண்டிய விண்வெளி உடையை வடிவமைப்பதற்கு 4 இந்தியா வீரர்கள் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்லவுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ வர்மா தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கூறுகையில், "விண்வெளி செல்லும் வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்று, இப்போது இந்தியா திரும்பியுள்ளனர். மிக முக்கியமான ஒரு பணிக்காக வரும் செப்டம்பர் மாதம் அவர்கள் மீண்டும் ரஷ்யா செல்லவுள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Input:https://m.timesofindia.com/india/4-gagannauts-will-go-back-to-russia-for-trying-out-customised-spacesuits-for-gaganyaan-mission/amp_articleshow/85781525.cms

Image courtesy: times of India

 


Tags:    

Similar News