மத்திய பட்ஜெட் தாக்கல்: இடம்பெறும் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்!

மத்திய பட்ஜெட் தாக்கலில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Update: 2023-02-01 05:38 GMT

இன்று காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தன்னுடைய ஐந்தாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். குறிப்பாக இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான பல்வேறு சிறப்புத் திட்டங்கள் இடம் பெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. பெண்களை கவரும் விதத்தில் அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஏற்கனவே கூறப்பட்டு இருக்கிறது.


சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் பட்ஜெட் அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கூறி இருக்கிறார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. குறிப்பாக இதில் 2.5 லட்சம் ரூபாயாக உள்ள வருமான வரி விலக்கு உச்சவரம்பை, 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News