வேலை வாய்ப்புகளை அதிகரிக்கப் போகும் அடுத்த ஆண்டு பட்ஜெட் - நிதியமைச்சரின் மாஸ்டர் ப்ளான்!
2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்களில் வேலைவாய்ப்புக்கு தொடர்பான நிதி ஒதுக்கீடு தேவை என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
மத்திய நிதி நிலை அறிக்கை என்று அழைக்கப்படும் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் இன்றுடன் நிறைவு அடைகிறது. இந்த நிலையில் தனிநபர் வருமான வரி, மின்வாகனங்களுக்கான வரி குறைவு, வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான திட்டங்கள் என உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்துக்கல்களில் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. எனவே 2023- 24 ஆம் ஆண்டிற்கான நிதியை அறிக்கையை நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நாட்டின் பொருளாதார மேம்படுத்தும் வகையில் என்னென்ன மாதிரியான திட்டம், முன்னெடுப்புகள் சலுகைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு தரப்பு கருத்துக்களை அறியும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்து எட்டு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.
வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தல் துறை, தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் பருவகால மாற்றம், நீதித்துறை மற்றும் முதலீட்டு சந்தைகள் சேவைகள் மற்றும் வர்த்தகம் சமுதாயத் துறைகள் தொழிற்சங்குகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் பொருளாதார வல்லுநர் உள்ளிட்ட ஏழு குழுக்களை சேர்ந்த 110 பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். எனவே நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தனிநபர் வருமான வரி, புதுமை கண்டுபிடிப்புகள் தொடர்பான வழித்தடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar