கடைசி நாளிலும் முடங்கிய நாடாளுமன்றம் - சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

Update: 2023-04-08 02:19 GMT

கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசும் போது, “இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடர் 2023-ல் 25 அமர்வுகள் மொத்தமாக நடைபெற்றன. இடைப்பட்ட காலகட்டத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை, பிப்ரவரி 13-ம் தேதி முதல் மார்ச் 12 வரையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் மார்ச் 13-ம் தேதி அன்று மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.


பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமாக 10 அமர்வுகள் நடைபெற்றன. 2-வது பகுதியில் 2 அவைகளிலும் மொத்தமாக 15 அமர்வுகள் நடைபெற்றன. ஆகமொத்தத்தில் 25 அமர்வுகள் நடைபெற்றன. இந்த ஆண்டின் முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றினார். அதற்கு பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் குறித்து இரு அவைகளிலும் பொது விவாதங்கள் நடைபெற்றன. லண்டன் பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ.க எம்.பிக்களும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.


ராகுல்காந்திக்காக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்தனர். கடைசி நாளில் கூட அவர்கள் கருப்பு உடை அணிந்து மீண்டும் நாடாளுமன்றத்தை அவமதித்தனர். இது நாட்டிற்கு துரதிஷ்டம். இந்த கூட்டத் தொடரில் 8 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. மக்களவையில் 6 மசோதாக்கள் நிறைவேறின. மாநிலங்களவையில் 6 மசோதாக்கள் நிறைவேறின.

Input & Image courtesy: News

Tags:    

Similar News