இலவசத்தால் இலங்கை போன்று இந்தியாவில் சில மாநிலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்: பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை!

Update: 2022-04-04 13:45 GMT
இலவசத்தால் இலங்கை போன்று இந்தியாவில் சில மாநிலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்: பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை!

மத்திய அரசுடைய துறை செயலாளர்கள் பிரதமர் மோடியுடவ் ஆலோசனை மேற்கொண்டனர். அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பெரிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வராததற்கு வறுமையை ஒரு காரணத்தை கூறும் பழைய கதையை விட்டுவிடுங்கள் என்றார். துறை செயலாளர்கள் எப்போதும் இந்திய அரசின் செயலாளர்களாக செயல்பட வேண்டும்.

அப்போது கூட்டத்தில் ஒரு சில அதிகாரிகள் பேசும்போது, சில மாநிலங்கள் அறிவித்த இலவச திட்டங்கள் பற்றி கவலை தெரிவித்தனர். அவைகள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை எனவும், இத்திட்டங்களால் மூலம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை போன்று சில மாநிலங்கள் சந்திக்கலாம் என கவலை தெரிவித்தனர்.


Source: Daily Thanthi

Image Courtesy:Vibes Of India

Tags:    

Similar News