'புர்காவில்' மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை ராணுவ முகாம் மீது விசிய மர்ம நபர்!

Update: 2022-03-30 09:32 GMT
புர்காவில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை ராணுவ முகாம் மீது விசிய மர்ம நபர்!

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பதுங்கு குழி மீது புர்காவில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசிய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சோபூர் என்ற இடத்தில் சிஆர்பிஎப் படையின் பதுங்கு குழி உள்ளது. அங்கு சாலையில் வந்த ஒரு பெண் தனது புர்காவில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை தூக்கி வீசினார். இதில் பதுங்குகுழி தீப்பிடித்தது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இது பற்றிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் கூறியதாவது: சோபூரில் அமைந்துள்ள சிஆர்பிஎப் பதுங்கு குழி மீது நேற்று (மார்ச் 29) பெட்ரோல் குண்டு வீசிய பெண் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் அப்பெண் கைது செய்யப்படுவார் எனக் கூறினார்.

Source: ANI

Image Courtesy: The Statesman

Tags:    

Similar News