பொதுமக்களுக்கு பொது வினியோக திட்டம் மற்றும் மத்திய அரசு திட்டங்களின் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைப்புகள் செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்துள்ளது.
எனவே உணவு பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக பொது வினியோக திட்டம், உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை 3 கட்டமாக வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar