மேற்கு வங்காளம் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கவில்லை என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் மத்திய அரசு உடனடியாக எங்கள் மாநிலத்தின் வாகனத்தை அணிவகுப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்குவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் மற்றும் மத்திய, மாநில அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கடைசி நேரத்தில் மனுதாரர் நீதிமன்ற கதவை தட்டியிருப்பதாலும், இன்னும் ஒரு சில நாட்களில் குடியரசு தினவிழா வருவதை முன்னிட்டு இதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.
Source: Maalaimalar
Image Courtesy: India Today