ராமர் கோவிலுக்கு நிதி வழங்கும் முஸ்லீம்களை எச்சரித்த PFI தலைவர் மீது வழக்குப் பதிவு.!

ராமர் கோவிலுக்கு நிதி வழங்கும் முஸ்லீம்களை எச்சரித்த PFI தலைவர் மீது வழக்குப் பதிவு.!

Update: 2021-02-21 11:04 GMT
தற்போது அயோத்தியில் ராமர் கோவிலுக்காக அனைத்து மக்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நன்கொடையை வழங்கி வருகின்றனர். இதுபோன்று ராமர் கோவில் கட்டுமானத்திற்கு நன்கொடை வழங்கும் முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கர்நாடக PFI அமைப்பு. ராமர் கோவிலுக்கு எதிராகக் கடுமையான சொற்களை முன்வைத்ததோடு இது RSS கான கோவில் என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்நாடக PFI செயலாளர் அனீஸ் அஹமத். 

மேலும் ஒரு பேரணியில் பேசிய அனீஸ் அஹ்மத், முஸ்லீம்கள் தங்கள் பகுதியில் உள்ள இந்து ஆர்வலர்கள், RSS மற்றும் பா.ஜ.க உறுப்பினர்களை அடையாளம் கண்டுகொள்ளுமாறும் கூறினார். தொடர்ந்து RSS குறித்து ஆத்திரமூட்டும் பேச்சுக்களைக் கூறிவந்த அனீஸ், நாட்டின் உண்மையான எதிரி இந்து தேசியவாத அமைப்புகள் என்று கூறி அது புற்று நோயைவிட மிகக் கொடியது என்று சொற்களைக் கக்கினார். அதனைத் தொடர்ந்து PFI யின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஹீரோக்கள் என்று கூறினார்.
 
அனீஸ் அவரின் கூற்றுப்படி,"முஸ்லீம்களின் பாபர் மசூதியின் நிலம் வழங்கும் போது அமைதி நிலவும் என்று கூறினார். மேலும் RSS தற்போது கோவிலுக்காக நிதி திரட்டுகிறது மற்றும் இதனோடு நிறுத்தாது என்று கூறி அவர்களை முஸ்லீம் எதிர்கொள்ளத் தொடங்கவேண்டும்," என்று கூறினார். 
 
PFI தலைவரின் ஆத்திரமூட்டும் பேச்சைத் தொடர்ந்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பாசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமை அன்று PFI தலைவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும் PFI தலைவர் தேசத்திற்கு எதிராக மற்றும் ஆத்திரமூட்டும் பேச்சினை வெளியிட்டுள்ளார் என்று கூறி கண்டனத்தைத் தெரிவித்தார். 
 
மேலும் PFI எவ்வாறு ராமர் கோவில் குறித்துப் பேசமுடியும், அது குறித்த பிரச்சினையை முன்பே உச்சநீதிமன்றம் முடித்துவைத்து கோவில் கட்டவும் அனுமதியளித்தது என்று கடுமையாகக் கேள்வியை எழுப்பினார். பிப்ரவரி 17 இல் மங்களூரு காவல்துறை PFI மீது இரண்டு வழக்கைப் பதிவு செய்திருந்தது. 

Similar News