C.B.I ஊழியர்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் : புதிய இயக்குனரின் அதிரடி அறிவிப்பு.!

Update: 2021-06-05 13:13 GMT

CBI என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வுத்துறையில் இந்த அமைப்பில் 33ஆவது இயக்குனராக புதிதாக பொறுப்பேற்ற இருப்பவர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால். அவர் கடந்த வாரம் பதவியேற்றார். பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நிபந்தனைகளை மற்றும் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். இவர் மத்திய புலனாய்வுத்துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நிர்வாக ரீதியாக மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளார். அந்த வகையில் இவர் தற்போது மத்திய புலனாய்வுத் துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் கீழ்க்கண்ட விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் சில தடைகளையும் விதித்துள்ளார்.


CBI அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட் போன்வற்றை அணியவும் முகத்தில் தாடி வைக்கவும் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய புலனாய்வுத் துறையின் வேலையில் போல ஊழியர்கள் அணியும் உடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,


CBI அலுவலகத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர்கள், முறையான சட்டை, பேன்ட் மற்றும் ஷூக்களை மட்டுமே அணிய வேண்டும். தாடி வைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு வரக்கூடாது. முழுவதும் கிளீன் ஷேவ் செய்து வர வேண்டும். பெண் ஊழியர்கள் புடவை, சூட் முறையான சட்டை மற்றும் பேன்ட்களை அணிந்து கொள்ளலாம். ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் மற்றும் செருப்புகளை யாரும் அலுவலகத்தில் அணியக்கூடாது. இந்த புதிய விதிகள் நாடு முழுதும் உள்ள அனைத்து CBI அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Tags:    

Similar News