இந்தியா முழுவதும் 9,182 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்: மக்கள் நலம் விரும்பும் மத்திய அரசு!

மக்கள் மருந்தக தினத்தின் இறுதிநாள் கொண்டாட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் L.முருகன் பங்கேற்பு.

Update: 2023-03-09 01:28 GMT

மக்கள் மருந்தக தினத்தின் இறுதிநாள் கொண்டாட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்துகொண்டார். புதுதில்லியில் நடைபெற்ற மக்கள் மருந்தக தினத்தின் இறுதிநாள் கொண்டாட்டத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்துகொண்டார்.


மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9182 பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு விற்பனை செய்யப்படும் மருந்துகள், சந்தை விலையை விட 50 சதவீதம் அளவிற்கு விலைக் குறைவாக உள்ளன. சில மருந்துகளின் விலை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை விலைக் குறைவாக உள்ளன.


மொத்தம் 1,759 மருந்துகளும், 280 அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் நுகர்வுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் 28.02.2023 வரை 565 புதிய பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ரூ.1,095 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ரூ.6,600 கோடி அளவிற்கு மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 763 மாவட்டங்களில் 743 மாவட்டங்களில் 9,100-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் உள்ளன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News