மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவலர்களுக்கான விருது ! தேர்வான 152 காவலர்கள் !
சிறந்த காவலர்களுக்கான விருதிற்காக தமிழகத்தைச் சேர்ந்த 8 காவலர்கள் இடம்பெற்று உள்ளார்கள்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும் அந்த விழாவின்போது, சிறப்பாக செயலாற்றிய காவலர்களை சிறப்பிக்கும் விதமாக விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, குற்றவழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய 152 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் குற்றப் பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது தற்பொழுது தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தேர்வான அனைவருக்கும் சுதந்திர தின விழாவின்போது விருதுகளும் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையிலிருந்து தலா 11 காவலர்களும், உத்திரப் பிரதேசத்தையைச் சேர்ந்த 10 காவலர்களும், கேரளா மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா 9 காவலர்களும் அதிகபட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, பீகார், குஜராத், டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தேர்வாகியுள்ளனர். இந்த விருது பட்டியலில் 28 பெண் காவல் அதிகாரிகளும் இடம்பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image courtesy:The Hindu