சாதனையாளர்களை பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு!
கலை, இலக்கியம், மருத்துவம், சினிமா, கல்வி உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விருதுகளைப் பெறுவதற்கு தகுதியான மற்றும் சாதனையாளர்கள் குறித்து சிபாரிசு செய்ய பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: பத்ம விருதுகளை மக்களின் விருதாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
எனவே பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடையே பத்ம விருது அளித்து அவர்களை கவுரவிக்க தகுதியான மற்றும் சாதனையாளர்களையும் சமூகத்துக்காக எவ்வித சுயநலமின்றி சேவை செய்பவர்களையும் பொதுமக்கள் அடையாளம் கண்டுப்பிடித்து சிபாரிசு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு என்று ஆன்லைன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பங்கள் மற்றும் சிபாரிசுகளை பொதுமக்கள் செய்யலாம். வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: DailyThanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/09/02055725/Central-Govt-calls-on-public-to-nominate-achievers.vpf