ராஜீவ்காந்தி அறக்கட்டளை உரிமத்தை அதிரடியாக ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன தெரியுமா?

சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து மத்திய அரசு நடவடிக்கை.;

Update: 2022-10-25 05:09 GMT
ராஜீவ்காந்தி அறக்கட்டளை உரிமத்தை அதிரடியாக ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன தெரியுமா?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ராஜீவ் காந்தி பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுகாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி மற்றும் பெண்கள், குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் நலமாகிய துறைகளில் இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது. இதன் அறங்காவலராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.


ராஜீவ் காந்தி சாரிடபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மற்றொரு நிறுவனம் கடந்த 2002 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைவரும் சோனியா காந்தி. கிராமப்புற ஏழைகளின் வளர்ச்சிக்காக இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது. உத்தரபிரதேசத்தின் பின் தங்கிய பகுதிகளிலும் ஆந்திர மாநிலத்திலும் ராஜீவ் காந்தி மகிலா விகாஸ் பரி யோஜனா, இந்திரா காந்தி கண் மருத்துவமனை ஆகியவற்றின் மூலமாக செய்து வருகிறது. ராகுல் காந்தி அசோக், கங்குலி ஆகியோர் இதன் அறங்காவலராக இருக்கிறார்கள்.


மேற்கண்ட இரண்டு அறக்கட்டளைகளும் நாடாளுமன்ற வளாகம் அருகே ராஜேந்திர பிரசாந்த் சாலையில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை மீது புகார்கள் எழுந்தன. சீனாவிடம் இருந்து ராஜீவ் காந்தி ஃபவுண்டர் இன்ஜெக்ஷனுக்கு நன்கொடைகள் பெற்றதாக கூறப்படுகிறது. ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு லஞ்சமாக நன்கொடை வழங்கப்பட்டதாகவும், பா.ஜ.க கேள்வி விடுத்தது. இந்நிலையில் சீன உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடைகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரத பணமாற்றம் நடந்துள்ளது என்பது போன்ற விசாரணை நடந்தது. இந்த விசாரணையை தொடர்ந்து ராஜீவ் காந்தி பவுண்டேஷன் மற்றும் ராஜீவ்காந்தி சாரிடபிள் டிரஸ்ட் ஆகிய இரண்டு அறக்கட்டளைகளின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News