வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்ட மத்திய அரசு: காரணம் என்ன?
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் 20000 மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தற்பொழுது தெரியவந்து இருக்கிறது. எனவே அவற்றுக்கான கடுமையான விதிகள் சட்டமாக்கப்படும் உள்ளன என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தற்பொழுது தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் இந்தியாவின் மாற்றத்தின் காலகட்டத்தில் தற்போது இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் வருகின்ற 2047 ஆம் ஆண்டு இந்தியாவில் வளர்ந்த நாடாக்க முயற்சிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்நாளில் ஒரு முறை ஒரு நூற்றாண்டுகளில் ஒரு முறை வரக்கூடிய வாய்ப்பு தற்போது அவருக்கு கிடைத்து இருக்கிறது. அதை இந்தியாவின் விளம்பர தூதர்களான வெளிநாட்டு பால் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் காணும் மாற்றத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாக நீங்கள் ஆற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குபடுத்துதல் சட்டத்தால் இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அந்த பிரச்சனைகள் உரிய காலத்தில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 20,000 மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறது. மத்திய அரசு விசாரணையில் தெரிய வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார். அதில் நல்ல தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான் என்று கூறினார்.
Input & Image courtesy: Thanthi News