கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் மத்திய அரசு: தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறதா?

கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்க மத்திய அரசு பல்முனை உத்திகளை கையாண்டு வருகிறது.

Update: 2023-03-24 13:29 GMT

கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்முனை உத்திகளை கையாண்டு வருகிறது. கொத்தடிமைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கு மத்திய அரசு 1976-ம் ஆண்டு சட்டம் இயற்றியுள்ளது. கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வுக்கான திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் மீட்கப்படும் ஒவ்வொரு கொத்தடிமை தொழிலாளர்களுக்கும் ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. அத்துடன் வீடு மற்றும் விவசாய நில ஒதுக்கீடு, கால்நடை மற்றும் பால் உற்பத்தி தொடர்பான தொழில்கள் பயிற்சி, குழந்தைகளுக்கு கல்வி உதவி உள்ளிட்ட பல உதவிகளும் வழங்கப்படுகின்றன.


மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சியின் பெயரில் இந்தியா முழுவதும் தற்பொழுது அதிகமான அளவில் கொத்தடிமைகள் முறை ஒழிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னும் சில பழமையான பழக்கங்களை பின்பற்றும் பகுதிகளில் கொத்தடிமை முறை இருந்து வருவதற்கு முடிவை கட்ட வேண்டும் என்று ஒரு நோக்கில் மத்திய அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சமுதாயத்தில் தற்போது நல்ல நிலைமையில் இருக்க வைத்து இருக்கிறது மத்திய அரசு.


மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 1016 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை தமிழ்நாட்டில் 297 பேர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News