4 கோடியே 30 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.!

பாஜக ஆளுகின்ற மாநிலங்களுக்கும் ஒரு மாதிரியாகவும், பாஜக ஆளாத மாநிலங்களில் வேறு வகையில் மருந்து விநியோகம் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் முதலை கண்ணீர் வடிப்பது அவர்களது இயலாமையை மறைக்க மேற்கொள்கின்ற செயலாகும்.

Update: 2021-04-09 05:51 GMT

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநில அரசுகள் தங்களிடம் தேவையான அளவு கொரோனா தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லை என்று கூறியிருந்தது. இதனால் கொரோனா தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறியிருந்தது.

இந்நிலையில், இதற்குப் பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும், 4 கோடியே 30 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து கையிருப்பு உள்ளது. எனவே எந்தவித பாகுபாடும் இன்றி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக கருதிதான் கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு விநியோகித்து வருகிறது.




 


பாஜக ஆளுகின்ற மாநிலங்களுக்கும் ஒரு மாதிரியாகவும், பாஜக ஆளாத மாநிலங்களில் வேறு வகையில் மருந்து விநியோகம் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் முதலை கண்ணீர் வடிப்பது அவர்களது இயலாமையை மறைக்க மேற்கொள்கின்ற செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News