பண்டிகை காலங்களில் தொற்று பரவும் அபாயம்: மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இருந்தபோதும் பண்டிகை காலங்களில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றது.

Update: 2021-10-27 05:42 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இருந்தபோதும் பண்டிகை காலங்களில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றது.

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணியானது இந்தியாவில் 100 கோடியை தாண்டி சென்றுள்ளது. இதனால் இந்தியாவில் தொற்று பரவல் வேகமாக கட்டுப்படுத்தப்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் தடுப்பூசி போடும் பணியை மேலும் விரைவு படுத்துவது பற்றி பேசப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், சில மாநிலங்களில் புதிய வகை ஏ.ஒய் 12 வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அது பற்றியும் விவாதம் செய்ய வாய்ப்புள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News