இனிமேல் ஹாரன் சத்தம் காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கும்: மத்திய அமைச்சர் தகவல்!

வாகனங்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Update: 2021-10-05 12:45 GMT

வாகனங்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்கின்றவாறு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளோம்.

இந்திய இசையான, புல்லாங்குழல், வயலின், மவுத்ஆர்கன், ஹார்மோனியம் ஆகியவற்றின் இசை மூலம் ஹாரன் ஒலிக்கின்ற அமையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறோம். மேலும், ஆல் இந்தியா ரேடியோவில் உள்ள இசை போல, ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் சைரன் ஒலிகள் காதுகளுக்கு இனிமையாக இருக்கின்ற வகையில் மாற்ற திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News