மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதே ராகுல்காந்தியின் வேலை.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.!
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாட்டில் உள்ள பொதுமக்களை குழப்புவதிலும், அச்சத்தை ஏற்படுத்துவதிலும் குறியாக இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாட்டில் உள்ள பொதுமக்களை குழப்புவதிலும், அச்சத்தை ஏற்படுத்துவதிலும் குறியாக இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.
ஆனால் பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி தேவையின்றி விமர்சனம் செய்து வருகிறார். குறைகூறும் ஆவணத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதை காட்டுகிறது. அதன் ஓர் அங்கமாகவே ராகுல்காந்தி இருக்கிறார். தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்த முயல்கிறீர்கள். 5வது அலை வரும் என்று தேவையின்றி பேசி வருகிறார்.
வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று சுகாதார அமைச்சர்கள் கூறியுள்ளது. 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதும், அது எப்படி 108 கோடி மக்களுக்கு செலுத்தப்படும் என்பதை சுகாதாரத்துறை விளக்கமாக கூறியுள்ளது. தடுப்பூசி போடும் பணியில் உலகளவில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.