புதிய நாடாளுமன்றம் கட்ட தடைகோரிய மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க கோரிய மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-05-31 06:26 GMT

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க கோரிய மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




 


டெல்லியில் 'சென்ட்ரல் விஸ்டா' என்று அழைக்கக்கூடிய புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை மத்திய அரசு தொடங்கியது. இதற்கு சிலர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தடைக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் இன்று நாடாளுமன்றம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

இது பற்றி தீர்ப்பளித்த நீதிபதிகள், புதிய நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க முடியாது. இந்தக் கட்டுமானப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மிகவும் அத்தியாவசியமானது என்று கூறினர்.




 



 


மேலும், கட்டுமானப் பணிக்கு தடைவிதிக்கக்கோரி வழக்குத் தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது எனவும் நீதிபதிகள் கூறினர். இதன் காரணமாக கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News