வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முனைப்பில் மோடி!
1958 முதல் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தன.
இந்த சட்டம் மாநிலங்களில் செயல்படும் ராணுவங்களுக்கு, சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் ஏதும் இல்லாமல் கைது செய்யலாம். விசாரணை நடத்தலாம். சுட்டுத்தள்ளுதல் போன்ற பல சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.
இந்த நிலையில், அஸ்ஸாமில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அஸ்ஸாமைப்போலவே நாகாலாந்து, மணிப்பூரிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நீக்க மத்திய செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.
நீண்ட காலமாக, வடகிழக்கு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் 75 சதவிகிதம் குறைந்துள்ளன.
அதனால்தான் முதலில் திரிபுராவிலும், மேகாலயாவிலும் அந்த சட்டத்தை எங்களால் நீக்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல், அஸ்ஸாமில் கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எங்களுக்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் இதனை நீட்டித்துக்கொண்டே இருந்ததே இதற்குக் காரணம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில், அஸ்ஸாமின் 23 மாவட்டங்களில் சிறப்பு நீக்கப்பட்டதால், தற்போது நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாக நாகாலாந்து மற்றும் மணிப்பூரிலும் இந்தச் சட்டத்தை நீக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என பேசினார் பிரதமர் மோடி.
Inputs From: Vikadan