பிராமணர்கள் பற்றி சர்ச்சை கருத்து ! தந்தை மீதே நடவடிக்கை எடுத்த சத்தீஸ்கர் முதல்வர் !
87 வயது முதியவர் என காரணங்களை அடுக்காமல் தந்தையாக இருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்த்ததால் நடவடிக்கை எடுத்த முதல்வரின் செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்வ் பிராமண அமைப்பு காவல் நிலையதில் புகார் ஒன்றை அளித்தது. இந்த புகாரில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பால்கேவின் தந்தை நந்தகுமார் பால்கே பிராமணர்களை வெளிநாட்டவர் எனவும் அவர்களை அடித்து விரட்ட வேண்டும் எனவும் சர்ச்சைகூறிய வகையில் பேசியுள்ளதாகவும் இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் பூபேஷ் பால்கே சட்டத்தின் முன் அனைவரும் சமம்.குறிப்பிட்ட சமூகத்தையோ மதத்தையோ இழிவாக பேசி அமைதியை சீர்குலைக்கும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
87 வயது முதியவர் என காரணங்களை அடுக்காமல் தந்தையாக இருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்த்ததால் நடவடிக்கை எடுத்த முதல்வரின் செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.