வெளிநாட்டில் போர் பயிற்சிகள் பங்கேற்ற முதல் இந்திய பெண்: அடுத்த கட்டத்திற்கு நகரும் இந்தியா!

வெளிநாட்டில் போர் பயிற்சி மேற்கொள்ள முதல் இந்திய பெண் பங்கேற்று இருக்கிறார் என்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

Update: 2023-02-07 03:33 GMT

தற்பொழுது பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் இந்தியா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முப்படைகளிலும் பெண்களின் பங்குகளுப்பை அதிகரிக்க வேண்டும் என்று ஒரு முயற்சிகள் முனைப்பாக செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த காலத்தில் பெண்களின் பங்களிப்பை விட வரும் காலத்தில் பெண்களின் பங்களிப்பு அனைத்து துறைகளிலும் வலுப்பெற்று வருகிறது. ஆண்களைப் போன்று பெண்களும் எல்லா துறைகளிலும் வந்து முத்திரை பதிக்க தற்பொழுது தொடங்கி விட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு வீர சாதனையை தான் அவினி சதுர்வேதி என்ற பெண் படைத்திருக்கிறார்.


குறிப்பாக இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் இவர் ராஜஸ்தான் வனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் B.Tech பட்டம் பெற்றவர். தொடர்ந்து ஹைதராபாத்தில் இந்திய வான் படை பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றார். 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படை போர் விமானியாக புதிய சரித்திரம் படைத்தார். இந்த சரித்திரத்தில் இவருடைய மற்ற சகோ தோழிகளும் பாவனா, மோகனா என்பவரும் இந்த சரித்திரத்தில் இடம்பெறுவார்கள். இந்த விமானப்படையில் தற்போது 20 பெண் போர் விமானிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு அபூர்வ சாதனை வாய்ப்பு கிடைத்திருக்கிறார். அவர் ஜப்பான் விமான படையுடன் இந்திய விமானப்படையும் இணைந்து வீர் கார்டியன் 2023 என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டுப்போர் பயிற்சியில் அவிணி பங்கேற்று அசத்து இருக்கிறார்.


இந்த கூட்டுப் போர் பயிற்சி ஜப்பானில் விமான படைத்தளத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்றுதன் மூலமாக வெளிநாட்டில் நடந்த போர் பயிற்சி யில் பங்கேற்ற முதல் பெண் விமானி போர் விமானி என்ற சரித்திரத்தை படைத்து இருக்கிறார். பறக்கும் பயிற்சியில் அதுவும் வெளிநாட்டு விமானப்படை பயிற்சியுடன் ஈடுபடுவது என்பது எப்பொழுதுமே ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இதில் நான் நிறைய கற்றுக் கொண்டேன், சர்வதேச பயிற்சியில் நானும் ஈடுபடுவது இதுவே முதல்முறை. இது எனக்கு மாபெரும் வாய்ப்பு அற்புதமான கற்றல் வாய்ப்பு என்று அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News