சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணி.. ரூ.63 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்.!

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணி.. ரூ.63 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்.!

Update: 2021-02-01 12:12 GMT

நடப்பு நிதியாண்டின் 2021 22 மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.


அதன் விவரம் வருமாறு: சென்னையில் 118 கி.மீ தொலைவுக்கு ரூ.63 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரிவுபடுத்தப்படும்.


மேலும் ரயில்வேத்துறை மற்றும் விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கு புதிய கட்டமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறினார்.
 

Similar News