சென்னை இரண்டடுக்கு மேம்பாலம் வரும் 2024-ல் திறப்பு - மத்திய அமைச்சர்!

சென்னையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் டிசம்பர் 2024 ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகின்றார்.

Update: 2022-10-05 03:28 GMT

சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்க 2009 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சேத்துப்பட்டு கூவம் கரையில் தூண்கள் அமைக்கப்பட்டன. கடந்த 2011ல் அதிமுக அரசு பொறுப்பேற்றும் இத்திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2014ல் மீண்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.


தற்போது மத்திய அரசு போக்குவரத்து சாலை அமைச்சகமும் இத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. வருங்கால சரக்கு வாகன போக்குவரத்து மட்டும் இன்றி, பயணியர் போக்குவரத்தை கருத்தில் கொண்டு இரண்டு அடுக்கு மேம்பாலமாக கட்டப்பட உள்ளது. இதற்காக 5,800 கோடி செலவிடப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. தற்பொழுது ஒப்பந்தக்காரர்கள் தேர்வு செய்யும் படி நடைபெற்று வருகிறது.


2023 ஜனவரி மாதம் கட்டுமான பணிகள் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் இதில் கட்கரி அவர்கள் தம்முடைய சமூக வலைத்தள பக்கங்களில் இது பற்றி கூறுகையில், புதிய இந்தியாவின் தடையற்ற போக்குவரத்துக்கு இணைப்பை வழங்கு வகையில் சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயில் இடையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப் படுகின்றது. இது 48% துறைமுகத்தின் சரக்கு திறனை அதிகரிக்கும். மேலும் சரக்குகள் ஆறு மாத கால காத்திருப்பு நேரம் குறையும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News