குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையில்லை: மருத்துவ நிபுணர்கள் கருத்து!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்று நோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.;

Update: 2021-10-21 02:55 GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்று நோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒப்புதல் வழங்குவது என்பது ஒழுங்குமுறை முடிவு ஆகும். எனவே பொது சுகாதார பதிலளிப்பை கருத்தில் கொண்டால் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்குத்தான் தடுப்பூசி போடுவதற்கான முன்னுரிமையை வழங்க வேண்டும். பெரிய அளவிலான பெருந்தொற்று பரவலுக்க குழந்தைகள் காரணமாக அமைய மாட்டார்கள். அது மட்டுமின்றி குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால் மட்டும் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியாது.

மேலும், குழந்தைகள் கொரோனாவை பரப்பவில்லை. எனவே குழந்தைகளுக்கு போடுவதற்கு பதில் பெரியவர்களுக்கே தடுப்பூசி போட வேண்டும். பெரியவர்களே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News