சீனா செய்யும் அட்டூழியம்... இந்தியா எடுக்க முடிவு என்ன... எதிர்பார்க்கும் உலக நாடுகள்!
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு தங்களுடைய பெயர்களை சூட்டி சொந்தம் கொண்டாடிய சீனா.;
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே தற்போது நெடுங்காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு வகை பகுதிகளை தங்களுக்கு உரியது என்று சீனா இந்தியாவிடம் தொடர்ச்சியான முறையில் உரிமை கொண்டாடி வருகிறது. அந்த பகுதியில் தற்போது அருணாச்சல மாநிலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத் தென்பகுதியான ஜான்நாக் என்று சீனா கூறி வருகிறது. இதனை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகின்ற நிலையில் தற்பொழுது பெரும் சர்ச்சை எழுந்து இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தில் உள்ள 11 இடங்களுக்கு தங்களுடைய பெயர்களை சூட்டி இருக்கிறது. குறிப்பாக இரண்டு நிலப்பகுதி இரண்டு குடியிருப்பு பகுதி, இரண்டு மலை சிகரங்கள், இரண்டு ஆறுகள் மற்றும் அவற்றை துணை நிர்வாகம் மாவட்டங்களுக்கு சீனா தன் பெயிரிட்டு இருக்கிறது. இந்த பெயர் பலகை சீனாவின் சிவில் விவகார துறை அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெயர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. சீனாவின் புதிய அடாவடிகளை இந்தியா முற்றிலுமாக மறுத்து இருக்கிறது மற்றும் நிராகரித்து இருக்கிறது.
இந்தியா இந்த மாதிரி நிராகரிப்பது முதல் முறையல்ல. பல்வேறு முறை சீனா இந்தியாவில் உள்ள பகுதிகளுக்கு தங்கள் பெயரை சூட்டி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. 2017 ஆம் ஆண்டும் சீன பெயர்களை சூட்டை முயற்சித்தது. 2021 ஆம் ஆண்டும் 15 இடங்களுக்கு பெயர்களை வைத்தது, தற்போது மூன்றாவது முறையாக 11 இடங்களுக்கு தங்கள் பெயர்களை சூட்டி இருக்கிறது. ஆனால் இதையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. கட்டாயம் இதற்கு சீனா பதில் கூறி ஆக வேண்டும் என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News