சீனாவுக்கு உதறல் ஆரம்பம் - மொபைல்களை உலகிற்கு ஏற்றுமதி செய்யும் தேசமாக மாறத் தொடங்கிய இந்தியா.!

சீனாவுக்கு உதறல் ஆரம்பம் - மொபைல்களை உலகிற்கு ஏற்றுமதி செய்யும் தேசமாக மாறத் தொடங்கிய இந்தியா.!

Update: 2020-12-10 08:31 GMT

முதன்முறையாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொபைல்போன்களின் எண்ணிக்கை இறக்குமதி செய்யப்பட்ட மொபைல்களை  விட அதிகரித்துள்ளது. ஆம், நாம் மொபைல்களை உலகிற்கு ஏற்றுமதி செய்யும் தேசமாக மாறத் தொடங்கியுள்ளோம். மேக் இன் இந்தியா என்ற பிரதமர் மோடியின் பெருங்கனவு மெயப்படத் தொடங்கியுள்ளது.

2020ம் நிதியாண்டில் இதுவரை 4.4 கோடி மொபைல்களை ஏற்றுமதி செய்துள்ளோம், 60 லட்சம் மொபைல்கள் மட்டுமே இறக்குமதி ஆகியுள்ளன. சில ஆண்டுகளில் உலகின் பிரதான உற்பத்தி மையமாக திகழும் வாய்ப்பு நம் முன்னே உள்ளது. சமீபத்தில் அரசு அறிவித்துள்ள தொழிலாளர்கள் நல சட்டத் திருத்தங்கள் அதற்கான சரியான முதல்படி.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகப் பல முன்னணி வெளிநாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய மண்ணில் தொழிற்சாலையை அமைக்கப் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது. உலக நாடுகளின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் புதிய தொழிற்சாலை துவங்க மிகவும் விரும்பத்தக்க இடமாக இந்தியா விளங்குகிறது

அமெரிக்கா சீனா இடையே ஏற்பட்ட வர்த்தகப் பிரச்சனையின் காரணமாகச் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்தியா PIL திட்டத்தின் மூலம் பல வெளிநாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களை ஈர்த்துள்ளது. இந்தியாவில் டெலிகாம் உபகரணங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கச் சிறப்பு உற்பத்தி இணைப்பு மானிய திட்டம் (PIL திட்டம்) கொண்டு வரப்பட்டு உள்ளது.

Similar News