கேரளா: கிறிஸ்துமஸ் பண்டிகை, கோவில் திருவிழா இரண்டையும் ஒன்றாக கொண்டாடும் மக்கள் !

கேரளாவில் கிறிஸ்மஸ் பண்டிகையும் கோவில் திருவிழாக்கள் இரண்டையும் ஒன்றாக கொண்டாடும் மக்கள்.

Update: 2021-12-25 14:13 GMT

கேரள மாநிலம் கொல்லத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலில் தான் இத்தகைய சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும் அங்குள்ள திருக்கண்ணமங்கல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலும், செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயமும் ஒன்றுக்கொன்று அருகருகில் அமைந்துள்ளதாம். மேலும் இரண்டு கட்டிடங்களும் ஒரே ஆண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு வாழும் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்கள் இருவரும் ஒரே மாதத்தில் தங்களுடைய பண்டிகைகளைக் கொண்டாடும் காரணமாக இருவரும் ஒரே நாளில் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப் படுத்துகிறார்கள். 


மேலும் அங்குள்ள உள்ளூர் மக்கள் இதுபற்றி கூறுகையில், கோவில் முன்புதான் வருடா வருடம் கிறிஸ்மஸ் பண்டிகையின் நிறைவு விழா நடைபெறுவதாக மகிழ்ச்சியாக கூறுகிறார்கள். மேலும் ஒவ்வொரு வருடமும் இது மாதிரிதான் பண்டிகைகள் நடைபெறுவதாக அவர்கள் கூறியுள்ளார்கள். இது இந்த இடத்தின் பாரம்பரியமாகவும் உள்ளூர் மக்கள் கருதுகிறார்கள். 


மேலும் இதுபற்றி கோவில் கமிட்டி தலைவர் ஜெயமோகன் அவர்கள் கூறுகையில், " தேவாலயம் எங்களுக்கும் பல்வேறு வகையில் உதவிகளைச் செய்திருக்கிறது. மக்கள் அனைவரும் மத நல்லிணக்கத்துடன் இந்த பகுதியில் வசிக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் கடந்த தலைமுறையில் இருந்து இது போன்ற வழக்கம் இங்கு கடைபிடிக்கப் படுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.  

Input & Image courtesy: The hindu



Tags:    

Similar News