சினிமா பாணியில்.. திருமணத்தில் திருடனும்.. ரூ.12 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்படும் சிறுவர்கள்.!

சினிமா பாணியில்.. திருமணத்தில் திருடனும்.. ரூ.12 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்படும் சிறுவர்கள்.!

Update: 2020-12-06 07:44 GMT

டெல்லி மற்றும் வடமாநிலங்களில் தற்போது திருமணக்காலங்கள் ஆகும். இது போன்ற சமயங்களில் பெண் வீட்டர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்கு விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ரொக்கம் அளிப்பது வாடிக்கையாகும். இவை அனைத்தும் திருமண மண்டபங்களில் வைத்து கொடுப்பார்கள்.


அப்போது அனைத்து பொருட்களையும் ஒரு நாள் முன்பே திருமண மண்டபத்தில் உள்ள அறையில் பொருட்கள் மற்றும் பணத்தை வைத்துவிடுவார்கள். அது போன்ற பொருட்கள் சமீப காலமாக திருடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திருமணம் நடைபெற்ற சில மண்டபங்களில் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் திருடு போனதாக டெல்லி போலீசாகு புகார்கள் சென்றுள்ளது.


அவை தொடர்பாக விசாரித்ததில், ரூ.1 கோடி மதிப்புக்கு மேல் பணம், நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முக்கியமான திருமணங்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பின்னர் அங்கு பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒரே மாதிரியான நபர்கள் பல திருமணங்களில் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 5 வாலிபர்கள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


விசாரணையில் அவர்கள் அனைவரும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த கும்பலில் உள்ள சிறுவர்கள் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை கொடுத்து குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.


அந்த சிறுவர்களுக்கு திருடுவதற்கான சிறப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. இந்த கும்பல் மேலும் டெல்லி முழுவதும் இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், புதிய திருமணம் செய்பவர்கள் அச்சத்திலேயே இருக்கின்றனர். அனைவரையும் விரைவில் கைது செய்துவிடுவோம் என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர்.


நாம் சினிமாவில்தான் இது போன்ற காட்சிகளை பார்ப்போம் தற்போது நேரிலே நடைபெறுகிறது என்றால், இது போன்ற காட்சிகளை சினிமாவில் தவிர்க்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் கூட. நல்லதை கடை பிடிக்காமல் தீயவை மற்றும் கடைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
 

Similar News