டெல்லியில் ஆர்பாட்டக்காரர்களால் மூன்று மாதங்களாகச் சாலை நெரிசலில் அவதிப்படும் பொது மக்கள்!

டெல்லியில் ஆர்பாட்டக்காரர்களால் மூன்று மாதங்களாகச் சாலை நெரிசலில் அவதிப்படும் பொது மக்கள்!

Update: 2021-02-24 10:36 GMT
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பொது மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கின்றது. மேலும் அவர்கள் அந்த சாலைகளில் அவர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்துச் செல்ல வேண்டியிருக்கின்றது. 

குடியரசு தின வன்முறையைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்கள் டெல்லி உள்ளே வருவதைத் தடுக்க சாலைகளை முழுவதுமாக அடைத்தது. மேலும் அந்த சாலைகளில் கற்கள் மற்றும் முள்வேலி வைத்துத் தடுத்திருப்பதால் அவற்றைக் கடக்க உள்ளூர் வாசிகளால் முடியவில்லை.
 
மேலும் காலை மற்றும் மாலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அல்லது அலுவலகத்துக்குச் செல்வதற்குச் சரியில்லாத மாற்றுச் சாலையைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த சாலைகளில் பெரிய குழிகள் மற்றும் கற்கள் குவிந்து இருப்பதால் கீழே விழுகின்றனர். 
முன்னர் இந்த தற்காலிக சாலை மூடப்பட்டது, ஆனால் மக்கள் அதனை மறுபடியும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த கரடுமுரடான சாலையில் சின்ன குழந்தைகளை வைத்து மக்கள் கடந்து செல்ல கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவசரக் காலங்களில் எந்த சாலையைப் பயன்படுத்துவது என்று தெரியாமல் கவனக்குறைவுக்கு உள்ளாகிவிட்டனர். 
 
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர வாரநாட்களில் அதிக சாலை நெரிசல் ஏற்படுகின்றது. அதிக மணிநேரம் காத்திருந்து இந்த சாலையைக் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றதால் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். 

சிங்கு, காஜிப்பூர், டிகிரி எல்லைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடைத்திருப்பதால் காவல்துறையினர் பொதுமக்களை மாற்றுப் பாதையில் செல்ல கட்டாயப்படுத்துகின்றனர் மற்றும் இதனால் நகரின் சில பகுதிகளில் சாலை நெரிசல் அதிகமாக உள்ளது. 
 
"நொய்டா-மீரட் பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. நொய்டா மற்றும் டெல்லி இடையேயுள்ள சில்லா எல்லை இருபக்கமும் திறந்துள்ளது," என்று போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Similar News